Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாகிஸ்தானில் தற்கொலை படை குண்டுத்தாக்குதல்; 40ஐ தாண்டும் மரணங்கள்!

பாகிஸ்தானில் தற்கொலை படை குண்டுத்தாக்குதல்; 40ஐ தாண்டும் மரணங்கள்!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள்

பாகிஸ்தான் நாட்டில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். 120 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மனித வெடிகுண்டு மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டு இருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் கைபர் பகதுன்வா மாகாணம் உள்ளது. அந்த நாட்டின் 4-வது பெரிய மாகாணமாக கைபர் பக்துன்க்வாவில் பஜவுர் என்ற மாவட்டம் உள்ளது. ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்த மாவட்டத்தில் ஜேயூஐ.எப் (JUI-F) அரசியல் கட்சி சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் இந்த அரசியல் கட்சியின் கூட்டத்தில் நூற்றுக்கணக்கனவர்கள் பங்கேற்று இருந்தனர்.

அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி குண்டு வெடித்தது. இதனால் கூட்டத்தில் இருந்தவர்கள் மரண ஓலமிட்டு அங்கும் இங்கும் சிதறி ஓடினர். குண்டு வெடித்ததில் அப்பகுதி முழுவதும் ஒரு நொடி குலுங்கியது. வெடி குண்டு தாக்குதலில் 39 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மேலும் 120 பேர் படுகாயம் அடைந்தனர்.

கை கால்களை இழந்த நிலையில், பலரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் மீட்பு குழுவினர் சேர்த்தனர். காயம் அடைந்தவர்களில் 17 பேர் நிலைமை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. தற்கொலைப்படை தாக்குதல் மூலம் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டு இருப்பதாகவும், மேடைக்கு அருகில் நின்று கொண்டிருந்த ஒருவன் வெடிகுண்டை வெடிக்க வைத்து தாக்குதல் நடத்தியிருப்பதாக கைபர் பக்துன்க்வா மாகாண அமைச்சர் ரியாஸ் அன்வர் தெரிவித்தார். குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தில் படுகாயங்களுடன் பலரும் உதவி கேட்டு அலறும் காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

ஆம்புலன்ஸ்கள் சைரன் ஒலித்தபடி அப்பகுதியை நோக்கி அணி வகுத்த சென்ற காட்சிகளும் நெஞ்சை உறைய வைக்கும் விதமாக உள்ளது. பாகிஸ்தானின் தேசிய சபை இன்னும் சில வாரங்களில் கலைக்கப்பட இருக்கிறது. வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் அங்கு தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தற்போதே தயாராகி வரும் நிலையில் இந்த தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு சீனாவின் உயர் மட்ட அதிகாரிகள் குழு பாகிஸ்தானுக்கு வருகை தந்துள்ள அதே நாளில் அங்கு வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது சீனாவையும் அதிர வைத்துள்ளது. இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. எனினும் ஜேயூஐஎப் கட்சிக்கு எதிராக சமீப காலமாக் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் உள்ளூர் பிரிவுதான் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.

UI-F பாசாங்கு தனத்துடன் செயல்படுவதோடு விரோத போக்குடன் செயல்படும் அரசுக்கு ஆதரவாக இருப்பதாக ஐ.எஸ் இயக்கம் குற்றம் சாட்டி வருகிறது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதில் இருந்தே பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. பாகிஸ்தானிலேயே இயங்கி வரும் தாலிபான் குழு மற்றும் தெஹ்ரீக் தாலிபான் பாகிஸ்தான் ஆகிய இயக்கங்கள் பாகிஸ்தானின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக அதிக அளவில் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. கடந்த ஜனவரி மாதம், போலீஸ் வளாகத்திற்குள் தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டதில் 80 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு இருந்தனர்.

தொடர்புடையசெய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!

July 21, 2026
பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!
செய்திகள்

பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!

July 21, 2026
30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!
செய்திகள்

30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!

July 21, 2026
செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
செய்திகள்

செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

July 21, 2026
கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!
செய்திகள்

கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!

July 21, 2026
இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!
செய்திகள்

இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!

July 21, 2026
Next Post
ஜப்பானிடம் இருந்து இலங்கைக்கு 611 மில்லியன் ரூபா மானியம்!

ஜப்பானிடம் இருந்து இலங்கைக்கு 611 மில்லியன் ரூபா மானியம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.