கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று (11) செவ்வாய்க்கிழமை தைப்பூசத்தை முன்னிட்டு விசேட வழிபாடுகள் ஆலய குரு பிரம்மஸ்ரீ பாலகிருஷ்ண சர்மா தலைமையில் இடம்பெற்றது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-410-1024x581.png)
முத்துமாரியம்மனுக்கு விசேட அபிஷேகம் இடம் பெற்றதை தொடர்ந்து, தைப்பூச வழிபாடுகள் ஆலயத்தில் பக்திபூர்வமாக இடம்பெற்றன.
இதில் விவசாயிகள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-411-1024x586.png)
தைப்பூச நிகழ்வில் கலந்துகொண்டு, நெற்கதிர்களை தங்களது வழிபாட்டறைகளில் வைத்து, இவ் வருடம் முழுவதம் அன்னலக்சுமி குறைவில்லாமல் கிடைக்க வேண்டி வழிபடுவது வழமை. அதனை முன்னிட்டு ஆலய நிருவாகத்தினால், பூஜைகளின் பின்னர் ஆலயத்திற்கு அருகிலுள்ள வயற்காணியில் புதிர் அறுவடை நிகழ்வு ஆலயக்குருக்கள் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-407-1024x565.png)
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-412-1024x568.png)