2022ஆம் ஆண்டுக்கான நிதிப் பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசியக் கொள்கை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில், கடந்த ஆண்டில் (2022) மது உற்பத்தி 9.9 சதவீதம் அதிகரித்துள்ளது என கூறப்பட்டுள்ளது.
2021ல் 37.5 மில்லியன் லீற்றராக இருந்த மது உற்பத்தி 2022ல் 41.2 மில்லியன் லீற்றராக 9.9 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் ஆண்டறிக்கை கூறுகிறது.
நிதியமைச்சகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மதுபானம் மீதான வரி வருமானம் 2021 இல் 138.6 பில்லியன் ரூபாவாக இருந்த நிலையில் 2022 இல் 165.2 பில்லியன் ரூபாவாக 19.2 வீதத்தால் அதிகரித்துள்ளது.
மதுபானம் தொடர்பான பொருட்களின் இலக்கு வருவாயை அதிகரிக்க, பாதுகாப்பு குறியிடல் மற்றும் பாதுகாப்பு குறியிடல் மேலாண்மை அமைப்பில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்கு கலால் திணைக்களம் முறையான மேற்பார்வை முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதையும் இந்த அறிக்கை காட்டுகிறது.