கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான விசாவை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் மறுத்திருந்தது. இது குறித்து தனது டுவிட்டர் பதிவில் இலங்கை விஜயத்திற்கான விசாவை வழங்க மறுத்து இலங்கை அரசு தன்னை பழிவாங்கல் செய்வதாகவும் தெரிவித்திருந்தார்.
இவர் கடந்த வாரம் கனேடிய அரசாங்கத்தில் பூர்விக குடிகள் உறவுகள் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போது, அவரது இலங்கை விஜயம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இலங்கை அரசாங்கத்திற்கு சவால் விடும் வகையில் பதிலளித்திருந்தார்.
கடந்த ஜூலை மாதம் 22 இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளவிருந்த நிலையில் அவரது விசாவை காரணமே இன்றி இலங்கை அரசு மறுத்திருந்தது. இம்முறை கனேடிய அமைச்சர் என்ற வகையில் இலங்கை அரசாங்கத்தின் வழிகாட்டுதல் இன்றி தமிழ் மக்களை சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை ஓர் அறிக்கையாக கனேடிய அரசாங்கத்திற்கு தான் வழங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இம்முறை இவர் கனேடிய அமைச்சர் என்பதனால் அவரது விசா அனுமதியை இலங்கை அரசு நிராகரிக்க முடியாது என்பதனாலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.