Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரச நிவாரண சேவை சட்டத்தின் பிரகாரம் 43 எம்.பிக்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை ; முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர்

அரச நிவாரண சேவை சட்டத்தின் பிரகாரம் 43 எம்.பிக்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை ; முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர்

2 years ago
in செய்திகள்

அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் பிரகாரம் 43 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைப்பின் மதிப்பீட்டு அறிக்கை மீளாய்வு செய்யப்பட வேண்டும் என முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் பிரதீபா மஹாநாம ஹேவா தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சுனாமி பேரழிவுக்கு பின்னர் 2005 ஆம் ஆண்டு அனர்த்த முகாமைத்துவ சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் பிரகாரம் தான் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

இயற்கை மற்றும் இதர அனர்த்தத்தினால் வீடு ஒன்று முழுமையாக சேதமடைந்தால், உயர்ந்தபட்சம் 25 இலட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட வேண்டும்.

ஆனால் 2022 ஆம் ஆண்டு வன்முறை சம்பவத்தை தொடர்ந்து வீடுகளை இழந்ததாக குறிப்பிட்டுக் கொண்டு 43 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோடி கணக்கில் இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

சட்டத்தின் பிரகாரம் ஒருவருக்கு தலா 25 இலட்சம் ரூபாவை வழங்கியிருக்க வேண்டும். அல்லது நடைமுறை காரணிகளை அடிப்படையாகக் கொண்டு 50 இலட்சம் ரூபாவை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் சட்டத்துக்கு முரணாக கோடி கணக்கில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொண்டவர்களில் ஒருசிலர் தாங்கள் இழப்பீட்டுத் தொகையை கோரவில்லை என்று தற்போது குறிப்பிடுகிறார்கள்.

தமக்கு இழப்பீடு வேண்டும் என்று இந்த 43 பேரும் கடந்த அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் மதிப்பீடு குழு ஒன்று நியமிக்கப்பட்டு அதற்கமைவாகவே இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது.

அரச நிவாரண சேவை சட்டத்தின் பிரகாரம் இந்த இழப்பீடு வழங்கப்படவில்லை. ஆகவே பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மதிப்பீடு குழு அறிக்கை பாராளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாக மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கொழும்பில் கடைக்குள் இயங்கியதாகக் கூறப்படும் இரகசிய நிலத்தடி இரவு விடுதி முற்றுகை!
செய்திகள்

கொழும்பில் கடைக்குள் இயங்கியதாகக் கூறப்படும் இரகசிய நிலத்தடி இரவு விடுதி முற்றுகை!

September 24, 2026
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சைப் பிரிவு ஆரம்பம்!
காணொளிகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சைப் பிரிவு ஆரம்பம்!

September 24, 2026
‘நாங்கள் தீவிரவாதிகள் அல்ல; தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்’; ஐ.நா.வில் ஈரான் ஜனாதிபதி
உலக செய்திகள்

‘நாங்கள் தீவிரவாதிகள் அல்ல; தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்’; ஐ.நா.வில் ஈரான் ஜனாதிபதி

September 24, 2026
அனோஜனை விடுவிக்க ஜனாதிபதியுடன் அவசர சந்திப்புக்கு தமிழரசுக் கட்சி கோரிக்கை!
செய்திகள்

அனோஜனை விடுவிக்க ஜனாதிபதியுடன் அவசர சந்திப்புக்கு தமிழரசுக் கட்சி கோரிக்கை!

September 24, 2026
புத்தள – மொனராகலையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; ஆறு பேர் வைத்தியசாலையில்!
செய்திகள்

புத்தள – மொனராகலையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; ஆறு பேர் வைத்தியசாலையில்!

September 24, 2026
மட்டு மாங்கேணியில் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் அமரர் திலீபனுக்கு நினைவேந்தல்
செய்திகள்

மட்டு மாங்கேணியில் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் அமரர் திலீபனுக்கு நினைவேந்தல்

September 24, 2026
Next Post
சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்- பிரதமர் ஹரிணி சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்- பிரதமர் ஹரிணி சந்திப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு