சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மெக்சிகோ மற்றும் கனடா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோத வகையில் புலம்பெயர்ந்து அமெரிக்காவிற்குள் செல்கின்றனர்.
இதுபோன்ற சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக ட்ரம்ப் தலைமையிலான புதிய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இதனடிப்படையில், அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-458.png)
இந்தியா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளைக் கண்டறிந்து அவர்களை அவர்களது சொந்த நாட்டிற்கு அமெரிக்க அரசு அனுப்பி வருகின்றது.
இந்தநிலையில், சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக போப் பிரான்சிஸ் அமெரிக்க பாதிரிகளுக்கு கடிதமான்றை அனுப்பியுள்ளார்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-460.png)
குறித்த கடிதத்தில் இந்த நடவடிக்கை புலம்பெயர்ந்தோரின் கண்ணியத்தை பாதிக்கிறது எனவும் மற்றும் இது மோசமாக முடிவடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
போர், வறுமை மற்றும் காலநிலை பேரழிவுகளில் இருந்து தப்பிச் செல்பவர்களை பிற நாடுகள் வரவேற்று, பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வரும் போப் ஆண்டவர், அரசாங்கங்கள் தங்கள் திறன் வரம்பிற்கு ஏற்றவாறு இதனை செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.