Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அர்ச்சுனாவால் தாக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதி

அர்ச்சுனாவால் தாக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதி

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

புதிய இணைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தாக்கியதாக கூறி, இருவர் யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவும் தாக்கப்பட்டதாகக் கூறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று (11) குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், இரு தரப்பினரிடமிருந்தும் பெறப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

முதல் இணைப்பு

யாழில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சனாவின் தாக்குதலுக்கு உள்ளாகிய நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று இரவு (11) யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றுக்கு இராமநாதன் அர்ச்சனா சென்று அங்கு காணொளி பதிவில் ஈடுபட்டார்.

இதன் போது அங்கு நின்ற நபர் தன்னை காணொளி பதிவு செய்ய வேண்டாம் என அர்ச்சுனாவிடம் தெரிவித்திருந்தார்.

இதன்போது அர்ச்சனா அதனை மீறி காணொளி பதிவில் ஈடுபட்டார். இந்நிலையில் அர்ச்சுனாவுக்கும் குறித்த நபருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது. இதன்போது அர்ச்சுனா பீங்கான் ஒன்றினை எடுத்து குறித்த நபரின் தலையில் தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற அர்ச்சனா, குறித்த நபர் தன் மீது தாக்குதல் நடாத்தியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார் என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

WhatsApp-ல் மிகப்பெரிய மாற்றம்; தொலைபேசி எண்ணை மறைக்கும் புதிய வசதி!
செய்திகள்

WhatsApp-ல் மிகப்பெரிய மாற்றம்; தொலைபேசி எண்ணை மறைக்கும் புதிய வசதி!

June 30, 2026
டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 54,000 ஐ தாண்டியது!
செய்திகள்

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 54,000 ஐ தாண்டியது!

June 30, 2026
“எல்லாமே பொய் குற்றச்சாட்டு போலி குற்றச்சாட்டு”; வாகனத்திற்குள்ளேயிருந்து பேசிய பிள்ளையான்!
காணொளிகள்

“எல்லாமே பொய் குற்றச்சாட்டு போலி குற்றச்சாட்டு”; வாகனத்திற்குள்ளேயிருந்து பேசிய பிள்ளையான்!

June 30, 2026
மட்டக்களப்பில் இடிந்து விழுந்த புதுப்பாலம்; தற்காலிக பெய்லி பாலம் அமைக்க நடவடிக்கை!
செய்திகள்

மட்டக்களப்பில் இடிந்து விழுந்த புதுப்பாலம்; தற்காலிக பெய்லி பாலம் அமைக்க நடவடிக்கை!

June 30, 2026
ராஜபக்ச குடும்பம் மீது 15 பில்லியன் டொலர் ஊழல் குற்றச்சாட்டு; சந்திரிகா அதிர்ச்சி தகவல்
அரசியல்

ராஜபக்ச குடும்பம் மீது 15 பில்லியன் டொலர் ஊழல் குற்றச்சாட்டு; சந்திரிகா அதிர்ச்சி தகவல்

June 30, 2026
மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட பிள்ளையான்; பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!
அரசியல்

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட பிள்ளையான்; பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!

June 30, 2026
Next Post
மின்வெட்டு எப்போது முடிவுக்கு வரும் என்பதை உறுதியாக கூற முடியாது; ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

மின்வெட்டு எப்போது முடிவுக்கு வரும் என்பதை உறுதியாக கூற முடியாது; ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு