மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான கவுதமலாவில் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த பஸ் சாலையோர தடுப்பின் மீது மோதி பள்ளத்தாக்கில் விழுந்தது.
இதில் குறைந்தது 51 பேர் பலியானதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-464.png)
விபத்துக்குள்ளான பஸ் பாலத்தில் இருந்து கவிழ்ந்து கழிவுநீரால் மாசுபட்ட ஆற்றில் விழுந்துள்ளது 70-க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற பஸ் இடிபாடுகளில் இருந்து 51 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக மீட்புக்குழு தெரிவித்துள்ளது.
விபத்துக்குள்ளான பஸ் எல் ப்ரோக்ரெசோவில் உள்ள சான் அகஸ்டின் அகாசாகுவாஸ்ட்லான் நகரத்திலிருந்து கவுதமாலா சிட்டிக்கு வடகிழக்கில் சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்தது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-465.png)
கவுதமாலா அதிபர் பெர்னார்டோ அரேவலோ இந்த துயரச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து, தேசிய அவசர நிலையை அறிவித்துள்ளார். “இன்று கவுதமாலாவுக்கு ஒரு கடினமான நாள்” என்றும் அவர் கூறியுள்ளார்.