பெரிய பிரித்தானியா லண்டனை மையமாக கொண்டு இயங்கும் மட்டக்களப்பு நிலிவுற்றோர் அபிவிருத்தி சங்கம் பட்ஸ் யுகே ( (BUDS UK) ) அமைப்பின் இலங்கையான மட்டக்களப்பை மையமாக கொண்டு இயங்கும் BUDSBT என்பன இணைநடது நலிவுற்ற மற்றும் விசேட தேவை உடைய மக்களின் நலன் கருதி நிர்மாணித்த 6 வீட்டுத்திட்டங்களின் இரண்டாம் கட்டமாக நிர்மாணிக்கப்பட்ட 3 வீடுகளை அமைப்பின் தலைவர் வைத்திய கலாநிதி ஹெலன் கங்காதரன் நேற்று புதன்கிழமை (12) கையளித்தார்.
இந்த அமைப்பின் திட்டத்தில் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 6 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 3 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-492.png)
இதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக வவுணதீவு பாவக்கொடிச்சேனை ஆரையம்பதி, பனிச்சையடி பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்ட 3 வீடுகள் கையளிக்கும் நிகழ்வு நேற்று (12) மட்டக்களப்பு அமைப்பின் தலைவர் எல்.ஆர். டேவிற் தலைமையில் இடம்பெற்றது.
இதில் அதிதிகளாக அமைப்பின் தலைவர் வைத்திய கலாநிதி ஹெலன் கங்காதரன், மட்டு மாவட்ட செயலாளர் எஸ்.சசிதரன், அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு அந்தந்த பயனாளிகளிடம் கையளித்தனர்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/IMG_2371-1024x768.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/IMG_2377-1024x768.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/IMG_2384-1024x768.jpg)