சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் ஓட்டுநர் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை விடுதலை செய்யும் முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் கல்கிசை நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-511.png)
திங்கட்கிழமை (10) குற்றப் புலனாய்வுத் துறையால் சமர்ப்பிக்கப்பட்ட சமீபத்திய சாட்சிய அறிக்கையின் சுருக்கத்தை சட்டமா அதிபர் மதிப்பாய்வு செய்து பொருத்தமான முடிவை எடுக்கும் வரை இந்த இடைநீக்கம் அமலில் இருக்கும்.
இருப்பினும், ஜனவரி 27, 2025 அன்று குற்றப் புலனாய்வுத் துறைக்கு அனுப்பப்பட்ட ஆலோசனைக் கடிதத்தை சட்டமா அதிபர் திரும்பப் பெறவில்லை என்று சட்டமா அதிபர் திணைக்களம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.