பெப்ரவரி 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை உருவாக்குவதற்கான இறுதிக் கட்ட கலந்துரையாடல் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, சிரேஷ்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

