டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அலிபாபா நல்ல நடைமுறையைக் கொண்டுள்ளது என்றும், அந்த அறிவை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக உள்ளது எனவும் அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அலிபாபா குழுமத்தின் இணை நிறுவனரும் தற்போதைய தலைவருமான ஜோசப் சி-யை சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பானது கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.
இலங்கையில் அலிபாபா குழுமத்தின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவது மற்றும் இலங்கையை உலகளாவிய விநியோகச் சங்கிலியின் மையமாக மாற்றுவதன் மூலம் விரைவான பொருளாதார வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் குறித்து இரு தரப்பினருக்கும் இடையே விவாதிக்கப்பட்டது.

தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கையை டிஜிட்டல் மையமாக மாற்றுவதற்கு அலிபாபா குழுமம் ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக ஜோசப் டி. சாய், ஜனாதிபதிக்குகு உறுதியளித்துள்ளார்.
டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அலிபாபா நல்ல நடைமுறையைக் கொண்டுள்ளது என்றும், அந்த அறிவை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக உள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அநுரகுமார திசாநாயக்க, இலங்கை ஒரு டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்க பாடுபடுவதாகவும், அதற்காக ஒரு தனி டிஜிட்டல் அமைச்சகத்தை நிறுவியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஒரு டிஜிட்டல் கட்டண தளத்தை உருவாக்கவும், டிஜிட்டல் மயமாக்கலுக்கு மனித வளங்களை தயார்படுத்தவும் அவசரமாக செயல்பட்டு வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.