தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் நாளை (17) சமர்ப்பிக்கப்படவுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
நிதி அமைச்சகத்தின் அதிகாரி ஒருவரால் தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரச சேவையில் ஆட்சேர்ப்புகள் பாதீட்டுக்கு பின்னர் ஆரம்பிக்கும் என்றும் ஆனால் அவை அத்தியாவசிய வெற்றிடங்களை நிரப்பும் செயற்பாடுகள் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிகள் எதுவும் அறிமுகப்படுத்தப்படாது எனவும் குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த ஆண்டு பாதீட்டில் வரிச் சலுகைகள் மற்றும் எரிபொருள் நிவாரணங்களை வழங்குமாறு கடற்தொழிலாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதனால் அவர்களின் தொழிலை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தொடர்ந்து முன்னெடுக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், மீன்பிடி உபகரணங்களின் விலை உயர்வின் காரணமாக மீன்பிடித் தொழிலைத் தொடர்வதில் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.