கிளீன் சிறிலங்கா எனும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்”சுத்தமான கடற்கரை கவர்ந்திழுக்கும் சுற்றுலாப்பயண முடிவிடம்” என்னும் தொனிப்பொருளில் மண்முனைப்பற்று (ஆரையம்பதி) பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கரையோர பகுதிகளை சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் நேற்று (16) ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு நடைபெற்றது.
குறித்த நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி .தெட்சணகெளரி தினேஷ் அவர்களின் தலைமையிலும், கரையோரம் பேணல் திணைக்களம், கடல்சார் சூழலியல் பாதுகாப்பு அதிகார சபை, அரச, அரச சார்பற்ற நிறுவனங்களுடன் பிரதேச செயலக அனைத்து உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் ஏற்பாடு செயப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வானது ஆரையம்பதி கிழக்கு, பாலமுனை, புதுக்குடியிருப்பு, கிரான்குளம் வடக்கு, கிரான்குளம் தெற்கு ஆகிய 5 இடங்களில் குறித்த பகுதிக்குரிய கிராம அலுவலர்களின் ஒருங்கிணைப்பில், பிரதேச மக்களின் பங்களிப்புடன் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.











