நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக வீதிகளில் வேலை செய்பவர்கள் மற்றும் வெளிவேலைகளில் ஈடுபடுபவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் வெப்பமான வானிலை நிலவுகிறது.
இது வெளிவேலைகளில் ஈடுபடும் நபர்களை கடுமையாக பாதிக்கின்றது.

எனவே, வீதிகளில் வேலை செய்பவர்கள் மற்றும் வெளிவேலைகளில் ஈடுபடுபவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கடந்த காலங்களில், வெப்பமான வானிலை காரணமாக பல பகுதிகளில் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
எனவே, வெப்பமான வானிலை குறித்து பொதுமக்கள் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும்.
கடும் வெப்பத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.