நெல் விவசாயிகளுக்கு உர மானியம் தொடர்ந்து வழங்கப்படுவதற்கு ரூ.35,000 மில்லியன் ஒதுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நெல் கொள்முதல் செய்ய 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயத்திற்கு புதுப்பிக்கப்பட்ட தரவு அமைப்பை நிறுவுதல். இது போதுமான நெல் பாதுகாப்பு இருப்பை பராமரிக்கிறது.
நெல் சந்தைப்படுத்தல் சபை சட்டத்தில் திருத்தம். விவசாய அமைச்சகத்திற்கு வழங்கப்பட்ட தொகைக்கு மேலதிகமாக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.