2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பொறியியல் தொழில்நுட்பப் பாடத்தின் நடைமுறை பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைகக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாளை மறுநாள் (19) முதல் மார்ச் 29 ஆம் திகதி வரை நாடு முழுவதும் 41 பரீட்சை நிலையங்களில் நடைமுறைப் பரீட்சைகள் இடம்பெறும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைக்கான திகதி மற்றும் இடம் விண்ணப்பதாரரின் அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், எக்காரணம் கொண்டும் அறிவிக்கப்பட்ட திகதி இடம் மாற்றப்படாது என்று திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், விண்ணப்பதாரர்கள் பரீட்சை அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள திகதியில் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக வர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.