கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் புகுந்த காட்டு யானைகள் 40இற்கும் மேற்பட்ட தென்னை மரங்களை அழித்து நாசம் செய்துள்ளன.
குறித்த சம்பவம், நேற்று(17) இரவு இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தற்போது காட்டு யானைகளின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இரவு கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் தென்னந்தோட்டம் ஒன்றுக்குள் புகுந்த காட்டு யானைகள் 40இற்கும் மேற்பட்ட தென்னை மரங்களை அழித்து நாசம் செய்துள்ளன.
