யாழில் இரசாயன திரவத்தை குடிநீரென நினைத்து பருகிய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (17) யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில், திருநெல்வேலியில் உள்ள கலாசாலை கிராமத்தில் வசிக்கும் ராசன் மைக்கல் என்ற 83 வயதுடைய முதியவரே உயிரிழந்துள்ளார்.

இரசாயன திரவத்தை குறித்த நபர் பருகியதையடுத்து ஏற்பட்ட அசௌகரியத்தால் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை யாழ். போதனா வைத்தியசாலையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.