2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வருமானத்தை ஈட்ட எதிர்பார்க்கப்படும் பிரதான வழிமுறையானது இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தி, வாகனங்களை இறக்குமதி செய்வதே என நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற வரவு செலவுத்திட்டத்தின் பின்னரான கலந்துரையாடல் ஒன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், டிஜிட்டல் சேவைகள், சிகரெட், மதுபானம் மற்றும் சூதாட்ட விளையாட்டுகள் மீதான அதிக இறக்குமதி வரிகள் மற்றும் ஏற்றுமதி மீதான இறக்குமதி வரிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.