அமெரிக்காவில் பணியிலிருந்து நீக்கிய நுாற்றுக்கணக்கான அமெரிக்க அணு ஆயுத திட்டப் பணியாளர்களை, மீண்டும் பணியமர்த்த ட்ரம்பினுடைய நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அந்த வகையில், சமீபத்தில் நுாற்றுக்கணக்கான அமெரிக்க அணு ஆயுத திட்டப் பணியாளர்கள், திடீரென, கடந்த வாரம் பணியில் இருந்து நிறுத்தப்பட்டனர்.
பணியிலிருந்து நிறுத்தப்பட்டதாக பலருக்கும், மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டன. அவற்றை படிக்காமல், அலுவலகம் வந்தவர்கள், உள்ளே செல்ல அனுமதிக்கப்படாமல் திருப்பியனுப்பப்பட்டனர்.

பணியிலிருந்து திடீரென நிறுத்தப்பட்ட பலர், அணு ஆயுதத் திட்டத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள். அவர்கள் திடீரென பணியிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளதால், அமெரிக்காவின் அணு ஆயுதத் திட்டங்கள் குறித்த கேள்வி எழுந்துள்ளது.
எதிர்காலத்தில் அமெரிக்காவின் செயல்திட்டங்கள் குறித்த அச்சமும் எழுந்துள்ளது. ட்ரம்பின் இச்செயற்பாட்டால், உள்நாட்டில் பல விதமான குழப்பங்கள் ஏற்படும் என பலதரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, தன் முடிவை நிறுத்தி வைத்துள்ள ட்ரம்ப், பணியிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களை மீண்டும் பணியமர்த்த உத்தரவிட்டுள்ளார்.