Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிள்ளையானால் கசிந்துள்ள பல ரகசியங்கள்; மகிந்த ஜயசிங்க

பிள்ளையானால் கசிந்துள்ள பல ரகசியங்கள்; மகிந்த ஜயசிங்க

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்கியுள்ள வாக்குமூலங்களின் அடிப்படையில் பல்வேறு விடயங்கள் தெரியவந்துள்ளதாக பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிள்ளையானிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில், 2019ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் அவருக்கும் தொடர்பு இருப்பது ஓரளவு தெரியவந்துள்ளது என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

குற்றப்புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிடுவதற்கு, கடந்த அரசாங்கங்களின் காலத்தில் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் பிள்ளையானை பார்வையிடுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். எனினும் அவர்களது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து, பிள்ளையானின் சட்டத்தரணி என்று கூறி கம்மன்பில பிள்ளையானை சந்தித்துள்ளார். ரணிலும் ஒரு சட்டத்தரணி தான் என்றாலும், அவர் அவ்வாறு முயற்சிக்கவில்லை.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ரவீந்திரநாத் படுகொலை சம்பவம் தொடர்பாக பிள்ளையான் கைது செய்யப்பட்டிருப்பினும், விசாரணைகளில் அவரிடம் இருந்து பல்வேறு தகவல்கள் அம்பலமாகியுள்ளன.

இதன்படி, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் பிள்ளையானுக்கு தொடர்பிருக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
ட்ரம்பின் வரியிலிருந்து விடுவிக்க கோரிய ஐ.நாவின் பட்டியலில் இலங்கை இல்லை

ட்ரம்பின் வரியிலிருந்து விடுவிக்க கோரிய ஐ.நாவின் பட்டியலில் இலங்கை இல்லை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு