எதிர்வரும் சிறுபோகத்திற்காக நெல் வயல்களில் வளர்க்கப்படும் கூடுதல் பயிர்களுக்கு 15,000 ரூபா மானியம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தலவாக்கலை பகுதியில் இன்று (19) நடைபெற்ற மக்கள் பேரணியில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனை அறிவித்தார்.
அதற்கமைய, வரவிருக்கும் சிறுபோகத்திற்காக நெல் வயல்களில் வளர்க்கப்படும் கூடுதல் பயிர்களுக்கு ரூபாய் 15,000 வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.