கணேமுல்லே சஞ்சீவ கொலை தொடர்பாக புத்தளம், பாலாவிய பகுதியில் நேற்று(19) பிற்பகல் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பல பெயர்களில், பல அடையாள அட்டைகளைப் பயன்படுத்தியதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போது, அவரிடம் இருந்து பல அடையாள அட்டைகளும், ஒரு சட்டத்தரணிக்கான அடையாள அட்டையும் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

சந்தேக நபர் தான் தயாரித்த சட்டத்தரணி அடையாள அட்டையில் சமிந்து தில்ஷான் பியுமாங்க கந்தனாரச்சி மற்றும் கொடிகாரகே கசுன் பிரபாத் நிஸ்ஸங்க போன்ற பெயர்களைப் பயன்படுத்தியதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காகக் கொழும்பு குற்றப்பிரிவுக்கு அழைத்து வரப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.