மட்டக்களப்பிற்கும் கொழும்புக்கும் இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு ரயில் நிலைய அதிபர் எஸ். பேரின்பராசா தெரிவித்தார்.
நேற்றிரவு 8.15 மணிக்கு கொழும்பு நோக்கி மட்டக்களப்பு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட பாடும்மீன் புகையிரதம் கல் ஓயாவில் யானைகளுடன் மோதியதில் ஐந்து யானைகள் உயிரிழந்துள்ளன.
இதனால் ரயில் மார்க்கத்தில் ஏற்பட்டுள்ள சீரின்மை காரணமாக மட்டக்களப்பிற்கும் கொழும்புக்கும் இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இன்று வியாழக்கிழமை (20) அதிகாலை 1.30 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்படவிருந்த புளத்திசி கடுகதி புகையிரத சேவை மற்றும் இன்று காலை 6:15 மணிக்கு கொழும்புக்கு செல்லவிருந்தபுகையிரத சேவை உட்பட அனைத்து புகையிரத சேவைகளும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில் நிலைய அதிபர் தெரிவித்தார் .
திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதும் மீண்டும் சேவைகள் வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.