கணேமுல்லே சஞ்சீவ மீது நேற்று (19) புதுக்கடை நீதிமன்றத்திற்குள் வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் இரண்டாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள 25 வயதுடைய இஷாரா செவ்வந்தி என்னும் நீர்கொழும்பு, சுடு வெல்கம பகுதியை சேர்ந்த பெண்ணை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

பொலிஸ் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணால் , துப்பாக்கிதாரிக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றும்,
குறித்த பெண்ணை கண்டுபிடிக்க சரியான தகவல் வாங்குவோருக்கு சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.

அதேசமயம் புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மஹரகம தம்பஹேன வீதியைச் சேர்ந்த சமிந்து டில்ஷான் பியுமங்க கந்தானராச்சி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளமை மேலும் குறிப்பிடத்தக்கது.
