பொதுஜன பெரமுன என்ற கப்பலை கடல் புயலில் இருந்து காப்பாற்றிய மாலுமியே ஜனாதிபதி ரணில்
விக்கிரமசிங்க என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் பொல்கஹவெல தொகுதி நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாறறும் போதே அவர் மேற் கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரி விக்கையில்-பொதுஜன பெரமுன என்ற கப்பல் புயலில் சிக்கிய போது, கப்பலை ரணில் விக்கிரமசிங்க என்ற மாலுமியிடம் ஒப்படைத்
தோம்.
கப்பலை புயலில் இருந்து மீட்டு அதில் பயணித்தவர்களை ஜனாதிபதி காப்பாற்றியுள்ளார்.நாம் புயலில் இருந்து மீண்டுள்ளதால் மாலுமியை தூக்கி கடலில் எறிய தயாரில்லை. “பொதுஜன பெரமுன“ கப்பலை காப்பாற்றிய மாலுமி ரணிலுக்கு உரிய சிகிச்சையை அளிக்க தயாராக உள்ளோம்.அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக வருவாரா என சிலர் கேட்கின்றனர். அது குறித்து தேர்தல்வரும் சந்தர்ப்பத் தில் உரிய தீர்மானத்தை மேற்கொள்வோம்.
அரசாங்கம் சரியான பாதையில் பயணிக்கிறது. நாட்டை பொருளாதார நெருக்கடியில் மீட்டுள்
ளோம் – என்றார்.