யாழ்ப்பாணத்தில் மதுபோதையில் நின்ற வன்முறை கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான முன்னாள் அதிபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் பூநகரி மத்திய கல்லூரி முன்னாள் அதிபரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பூநகரி மத்திய கல்லூரி அதிபரும் , உயிரிழந்த முன்னாள் அதிபரும் கடந்த சனிக்கிழமை பூநகரி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது தனங்களப்பு பகுதியில் நிறை போதையில் நின்ற வன்முறை கும்பல் அவர்களை வழிமறித்து மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர்.
இந்நிலையில் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஓய்வு பெற்ற அதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள அதேவேளை பொதுமக்களின் வாகனங்கள் சில ஏற்கனவே காடையர்களால் இந்த பகுதிகளில் கொள்ளையடிக்கப்பட்டு வந்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.