Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரித்தது நாமல்ல; சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரித்தது நாமல்ல; சுமந்திரன்

2 years ago
in அரசியல், செய்திகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளே இருக்கின்ற கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டு, பின் ஒன்றாக ஆட்சியமைப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது, அந்த முடிவு சரியான விதத்தில் புரிந்துகொள்ளப்படாமல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாங்கள் பிரித்துவிட்டோம் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன என இலங்கைத் தமிழரசுக் கட்சின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக தொகுதி அடிப்படையிலான கலந்துரையாடல்கள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. யாழ்ப்பாணம் மாவட்டத்தை பொறுத்தவரையில் 17 சபைகள் உள்ளன.

இந்தச் சபைகள் அமைந்துள்ள வெவ்வேறு தொகுதிகளில் கலந்துரையாடி, அதன்பின்னர் மாவட்டக் கிளையில் இது குறித்து பேசி சில முடிவுகளை எடுக்க வேண்டிய தேவையுள்ளது. கடந்த வாரத்தில் மாவட்டக் கிளையில் தீர்மானம் எடுத்தோம்.

அதன்படி ஒவ்வெரு தொகுதிகளிலும் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. எமது கட்சி தனித்துப் போட்டியிடுவது என்ற முடிவை சென்ற தடவை தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாகவே நாங்கள் எடுத்திருந்தோம்.

அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளே இருக்கின்ற கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டு, பின்னர் ஒன்றாக ஆட்சியமைப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது. அந்த முடிவு சரியான விதத்தில் புரிந்து கொள்ளப்படாமல், நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரித்துவிட்டோம் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால், இந்தத் தேர்தல் முறைமையைக் கருத்தில்கொண்டு தனியாக ஒரு கட்சி ஆட்சியமைப்பது மிகவும் கஷ்டமான விடயம் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே, இப்போது நாங்கள் சிபாரிசு செய்த அந்த முறை சிறந்தது என்ற எண்ணம் ஏனைய கட்சித் தலைவர்கள் மத்தியிலும் காணப்படுகின்றது.

ஆகவே, அவர்களிடமும் நாங்கள் இது குறித்து பேசியிருக்கின்றோம். வெவ்வேறு இடங்களில் சில வேளைகளில் சற்று வித்தியாசமான அணுகுமுறைகளை நாங்கள் கையாள வேண்டியுள்ளதாக இருக்கின்றது.

இந்த தேர்தல் முறைமையை எப்படியாக எங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்துவது என்பது குறித்து ஒவ்வொரு சபையாக நாங்கள் ஆராய வேண்டிய தேவை இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsbattinewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
மட்டு மாவட்ட விவசாய அமைப்பினர் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்

மட்டு மாவட்ட விவசாய அமைப்பினர் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.