மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தியை செய்வதற்கான முறையான திட்டங்களின் முன்மொழிவு, மேட்டுநில விவசாயிகளுக்கு நட்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்கக்கூடிய வகையில் தொழிற்சாலைகளை உருவாக்கல், கடந்த காலங்களில் உருவாக்கிய தொழிற்சாலைகளை புனர்நிர்மாணம் செய்ய வரவு செலவு திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் அரசு நிர்வாகங்களில் குறிப்பாக சுகாதார துறையில் ஆளணிப் பற்றாக்குறை மற்றும் உட்கட்டமைப்பு விருத்தி செய்ய வேண்டும் எனவும், கல்குடா வலைய ஆசிரியர் வளப் பற்றாக்குறை மற்றும் பட்டதாரிகள் (B.Ed.) தகைமையினை பூர்த்தி செய்தவர்களிற்கான ஆசிரியர் நியமனம் போன்ற பல்வேறு விடயங்களை ஆட்சிக்கு வந்து இருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என கடந்த வியாழக்கிழமை ( 20 ) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கருத்து தெரிவித்துள்ளார்.
