துபாயில் தலைமறைவாக உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருமான ”சேதவத்த கசுன்” என்பவரின் உதவியாளர் ஒருவர் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கொழும்பு, முகத்துவாரம் போகஹ சந்திக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு வெல்லம்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 11 கிராம் 500 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் வாள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முகத்துவாரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.