குற்றவாளிகள் மற்றும் துப்பாக்கிகள் குறித்து தகவலளிக்கும் பொதுமக்களுக்கு பணப்பரிசில்கள் வழங்கப்படும் என பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய கூறியுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், குற்றவாளிகள் தொடர்பில் 1997 என்ற இலக்கம் ஊடாக தகவல்களை வழங்க முடியும்.
டி 56 ரக துப்பாக்கி குறித்த தகவல்களை வழங்கினால் 10 லட்சம் ரூபா வரை பணப் பரிசில் வழங்கப்படும்.
தகவல் வழங்குபவர்களின் இரகசியம் பேணப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.