இலங்கையின் இலவச சுகாதார சேவையை வலுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளை வரவேற்றுள்ள நிலையில், 2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட சம்பள திருத்தங்கள் குறித்து அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கவலை எழுப்பியுள்ளது.
இதன்படி. சுகாதாரத் துறைக்கு 604 பில்லியன் மற்றும் மருத்துவப் பொருட்களுக்கு 185 பில்லியன் ஒதுக்கீடுகள் செய்யயப்பட்டுள்ளமையானது.

இருப்பினும், அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மணிநேர கூடுதல் கடமை கொடுப்பனவு விகிதத்தை 50வீதம் குறைத்து விடுமுறை கொடுப்பனவுகளைக் குறைக்கும் முடிவு மருத்துவ நிபுணர்களுக்கு நிதி இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்று அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஏற்பாடுகள், மருத்துவர்களை மனச்சோர்வடையச் செய்துள்ளதுடன் இந்த பிரச்சினையைத் தீர்க்கத் தவறினால் தொழிற்சங்க நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என்றும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம எச்சரித்துள்ளது.