Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
செம்மணியில் பாரிய மனித புதைகுழியில் இதுவரை 07 மண்டையோடுகள் மீட்பு

செம்மணியில் பாரிய மனித புதைகுழியில் இதுவரை 07 மண்டையோடுகள் மீட்பு

2 days ago
in செய்திகள்

யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மயானத்தை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைக்க சட்டத்தரணிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

செம்மணி – சிந்துபாத்தி மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக நல்லூர் பிரதேச சபையால் கடந்த பெப்ரவரி மாதம் குழிகள் வெட்டப்பட்டபோது, மனிதச் சிதிலங்கள் பல மீட்கப்பட்டிருந்தன.

அந்த மனிதச் எச்சங்கள் 1995, 1996ஆம் ஆண்டுகளில் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுடையதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் மேற்கொண்ட ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்து, அகழ்வுப் பணிகள் கடந்த மே மாதம் 15ஆம் திகதி ஆரம்பமானது.

2ஆம் நாளான 16ஆம் திகதி அகழ்வின், போது முழுமையான என்புத்தொகுதிக்கு மேலதிகமாக, மண்டையோடு ஒன்றும், கை எலும்பு ஒன்றும் அடையாளம் காணப்பட்டது.

இவை அனைத்தும் அகழ்வு செய்யப்படும் பகுதியின் வெவ்வேறு இடங்களில் அடையாளம் காணப்பட்டமையால், அந்த இடம் மனிதப் புதைகுழியாக இருக்கலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டிருந்தது.

அந்நிலையில் 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பெய்த மழை காரணமாக அகழ்வு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு இருந்தன.

இந்நிலையில், நேற்று (02) மீள அகழ்வு பணிகள் ஆரம்பமான போது, ஏற்கனவே அகழ்வு பணிகள் இடம்பெற்ற பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி அப்பகுதி சகதியாக காணப்பட்டமையால், பிறிதொரு பகுதியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அதன் போது, 5 மண்டையோடுகளுடன், எலும்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. குறித்த எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதன் அடிப்படையில் அவசர அவசரமாக புதைக்கப்பட்டவையாக இருக்கலாம் எனும் சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

இதுவரையிலான அகழ்வு பணிகளில் 07 மனித மண்டையோடுகளுடன் கூடிய, எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

3 மண்டையோடுகளுக்கு மேல் ஒரு பகுதியில் அடையாளம் காணப்பட்டால் அப்பகுதியினை மனித புதைகுழி என பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.

அதனால், அப்பகுதியை மனித புதைகுழி என பிரகடனப்படுத்துமாறு யாழ் . நீதவான் நீதிமன்றில் சமர்ப்பனங்களை முன்வைக்க உள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்னர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சமுர்த்தி சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் ஒன்றை சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை
செய்திகள்

சமுர்த்தி சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் ஒன்றை சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை

June 5, 2025
அழகு சாதனப் பொருட்களை உண்டு காணொளி பதிவிடும் இன்ஸ்டா பிரபலம் மரணம்
உலக செய்திகள்

அழகு சாதனப் பொருட்களை உண்டு காணொளி பதிவிடும் இன்ஸ்டா பிரபலம் மரணம்

June 5, 2025
செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்த நிதி ஒதுக்கீடுவதாக நீதி அமைச்சர் உறுதி
செய்திகள்

செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்த நிதி ஒதுக்கீடுவதாக நீதி அமைச்சர் உறுதி

June 5, 2025
உதய கம்மன்பிலவுக்கு எதிரான வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்
செய்திகள்

உதய கம்மன்பிலவுக்கு எதிரான வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்

June 5, 2025
காணொளிகள்

வடமாகாண அரச வைத்தியசாலைகளுக்கு மக்கள் வழங்கும் நன்கொடைகளில் மோசடியா?

June 5, 2025
உப்பு பயன்பாடு தொடர்பில் பொதுமக்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும்; சுகாதார அமைச்சகம்
செய்திகள்

உப்பு பயன்பாடு தொடர்பில் பொதுமக்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும்; சுகாதார அமைச்சகம்

June 5, 2025
Next Post
தேங்காய் பால் கொண்டுவந்த முதல் கப்பல் இலங்கையை வந்தடைந்தது

தேங்காய் பால் கொண்டுவந்த முதல் கப்பல் இலங்கையை வந்தடைந்தது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.