வேள்ட் விஷன் அமைப்பினரினால் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவினில் தெரிவு செய்யப்ப பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு துவிச்சக்கர வண்டிகளை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் வழங்கி வைத்தார்.

வேள்ட் விஷன் அமைப்பினர் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவினுல் பின்தங்கிய பிரதேச பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் மாணவர்களின் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு இவ் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், இப்பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்து சுய பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கு தையல் இயந்திரங்கள் மற்றும் இயந்திர உபகரணங்கள் இதன் போது அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம், வேள்ட் விஷன் உத்தியோகத்தர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கங்காதரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இப்பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் இடைவிலகளை குறைப்பதற்கு வேள்ட் விஷன் அமைப்பினரினால் பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

