Hipposideros srilankaensis என்ற புதிய வகை வௌவால் இனம் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறையைச் சேர்ந்த பார்கவி ஸ்ரீனிவாசலு தலைமையில் ஒரு தசாப்த கால ஆய்வில் இந்த புதிய இனத்தை அடையாளம் கண்டுள்ளது.
இந்த ஆய்வுக் குழு இந்தியா, இலங்கை மற்றும் தாய்லாந்து முழுவதும் பல இடங்களில் ஆய்வு செய்து, அவர்களின் கண்டுபிடிப்புகளை ஆதரிக்க முக்கியமான மாதிரிகள் மற்றும் ஆதாரங்களை சேகரித்தது.
இதன் முடிவில் இலங்கையில் ஒரு புதிய வகை வௌவால் இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், இந்த கண்டுபிடிப்பு சர்வதேச வகைபிரித்தல் இதழான ஜூடாக்ஸாவில் வெளியிடப்பட்டுள்ளது.
