உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் மூன்றாம் சார்ல்ஸை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு இங்கிலாந்தின் சாண்ட்ரிங்ஹாமில் நடந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அங்கு உக்ரைன் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த சந்திப்பு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீடித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரு தலைவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் மிகச் சிறந்த மட்டத்தில் இருந்ததாக வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.