இந்தியாவுடன் இணைந்து செயற்படுத்துவதற்கு முன்மொழியப்பட்ட காற்றாலை மின் திட்டம் தொடர்பாக புதிய அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதைப் பார்க்க காத்திருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்திய தலைநகர் புது டெல்லியில் நடைபெற்று வரும் ‘NXT சர்வதேச மாநாட்டில்’ பங்கேற்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அங்கு நடைபெற்ற ஊடகவியாலளர் சந்திப்பில் வைத்து இதனைத் தெரிவித்தார்.

இந்திய பயணத்தின் போது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.