இன்றைய தினம் 03.03.2025 பாடசாலை விளையாட்டு மைதானத்தில் வித்தியாலய முதல்வர் த.அருள்ராசா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதிதியாக பட்டிருப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளர்
சி.சிறிதரன் கலந்து கொண்டார்.
இதன்போது சேரன் , சோழன், பாண்டியன் என 03 இல்லங்களாக பிரிக்கப்பட்டு மாணவர்களின் திறனாய்வு போட்டிகள் இடம்பெற்றன.
மேலும் அதிதிகள் மலர்மாலை அணிவித்து வன்ட் வாத்தியங்கள் முழங்க வரவேற்கப்பட்டு தேசியக்கொடி , பாடசாலை கொடி ,இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டு பின்னர் , இறைவணக்கம், ஒலிம்பிக் தீபம் ஏற்றுதல் , ஆரம்ப பிரிவு மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சியும் , இடைநிலைபிரிவு மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சியும் நிகழ்வை அலங்கரித்தன.

மாணவர்களின் அணிநடை மரியாதை , அதிதிகள் உரை , மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வெற்றி கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது பட்டிருப்பு கல்வி வலயத்தின் பிரதி கல்வி பணிப்பாளர் திவிதரன், திட்டமிடல் பிரதி கல்வி பணிப்பாளர் ஜீவானந்தராசா , கல்வி அபிவிருத்தி பிரதி கல்வி பணிப்பாளர் வைஷ்ணவி , செட்டிபாளையம் பிராந்திய வைத்தியசாலையின் வைத்தியர் அற்புதராசா மற்றும் ஆசிரியர்கள் , மாணவர்கள், பழைய மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





