இலங்கை சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வேலைநிறுத்தமானது, எட்டாவது நாளாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடற்றொழிலாளர்கள் தங்கச்சிமடத்தில் நான்காவது நாளாக உள்ளிருப்பு மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், தற்போது திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நாளை அடுத்த கட்ட போராட்டம் நடத்துவதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.