நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட அதிநவீன கையடக்கத்தொலைபேசிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பகுதியில் வசிக்கும் 28 வயதுடைய வியாபாரி எனத் தெரிவிக்கப்படுகின்றது.

துபாயில் இருந்து நாட்டிற்கு வந்த சந்தேக நபரின் 3 பயணப்பொதிகளில் சுமார் 30 மில்லியன் ரூபா பெறுமதியான பல்வேறு வகையான 111 விலையுயர்ந்த கையடக்கத்தொலைபேசிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.