காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடிய சிறிய மழைவீழ்ச்சியை தவிர, நாட்டில் பெரும்பாலும் மழையற்ற காலநிலையே நிலவும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என்று குறித்த மையம் தெரிவித்துள்ளது.