பொலிஸார் மற்றும் முப்படையினரால் நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கையில் தப்பியோடிய 679 இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும், 572 பேர் இராணுவ நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில், 455 பேர் இராணுவத்தினர் எனவும், 69 பேர் விமானப்படையினர் எனவும் மீதமுள்ள 48 பேர் கடற்படையை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 24ஆம் திகதி, இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் ஏயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்தா (ஓய்வு) இராணுவத்தை விட்டு வெளியேறிய அனைத்து வீரர்களையும் உடனடியாக கைது செய்ய உத்தரவு பிறப்பித்ததையடுத்து 679 இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.