“நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள் “என்னும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு இலங்கையில் மார்ச் 02 தொடக்கம் மார்ச் 08 வரை கொண்டாடப்படுகின்றது.
அதன் அடிப்படையில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் நேற்று முன்தினம் (05) செயலக கலந்துரையாடல் மண்டபத்தில் ஆயுர்வேத மருத்துவ முகாம் நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் “ஆரோக்கியமான பெண்கள் தேசத்திற்கு ஒரு பலம் ” என்னும் தொனிப்பொருளுக்கமைய ஆயுள் வேத மருத்துவ முகாம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதேச மக்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களும் தங்களுக்கான சிகிச்சையினைப் பெற்றுக்கொண்டனர்.

அதேசமயம் குறித்த நிகழ்விக்கான சிகிச்சையினை ஆயுள்வேத வைத்தியசாலை வைத்தியர்கள் மருத்துவசேவையை வழங்கியிருந்தனர்.




