மட்டக்களப்பு காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் திடீரென பெய்த மழை ஓய்ந்ததன் காரணமாக சில நாட்களுக்குள் 20 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.நசீர்தீன் தெரிவித்தார்.
காத்தான்குடி பிரதேசத்தில் திடீரென இம்மாத ஆரம்பத்திலிருந்து கடந்த சில நாட்களுக்குள் இவ்வாறு அதிக அளவிலான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து டெங்கு நுளம்புகளை கண்டறியும் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நேற்று (07) இப்பிரதேசத்தில் உள்ள 100 வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனைகளின் போது 45 வீடுகளில் டெங்கு குடம்பிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெங்கு குடம்பிகள் உற்பத்தியாகும் வகையில் சூழலை வைத்திருந்தவர்கள் எச்சரிக்கப்பட்டதுடன், சில தினங்களுக்குள் அவற்றை சீர் செய்யாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்தனர்.
குறித்து எச்சரிக்கையும் மீறி சுற்றுச்சூழலை வைத்திருந்த சில வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் மேற்பார்வை சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.






