கடந்த ஆண்டு இலங்கையில் 16 வயதுக்குட்பட்ட 216 சிறுமிகள் கர்ப்பமாகியுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்ன இன்று (08) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

“இந்தப் பிரச்சினையின் மிகவும் கவலைக்குரிய பகுதி என்னவென்றால், இந்த சிறார்களில், பத்து வயது சிறுமி ஒருவர் இவ்வளவு இளம் வயதிலேயே கர்ப்பமாகிவிட்டார்,” என்று நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.