மட் /பட் மண்டூர் சக்தி மகா வித்தியாலயத்தில் சாதனையாளர் பாராட்டு விழா மற்றும் ஏத்து இதழ் -02 சஞ்சிகை வெளியிட்டு விழா நேற்றைய தினம் ( 07) வித்தியாலய அதிபர் வரதராஜன் சௌஜன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக பட்டிருப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் கலந்து சிறப்பித்தார்.
இதன் போது தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை, க.பொத.சாதாரண தரம் ,க.பொ.த உயர்தரத்தில் சித்தி பெற்று பல்கலைக்கழகம் தெரிவாகிய மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் அதிதிகளால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந் நிகழ்வின் மற்றுமொரு அங்கமான ஏத்து இதழ் சஞ்சிகையின் முதல் நூல் பாடசாலை அதிபரால் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பட்டிருப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளர் சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. பின்னர்.ஏனைய அதிதிகளுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வின் ஏத்து இதழுக்கான நயவுரையினை தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் சிறிதரன் வழங்கினார்.

இதன்போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட பட்டிருப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளர் சிவஞானம் சிறீதரன் பாடசாலை சமுகத்தினால் பொன்னாடை போர்த்தி , நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந் நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக ஆசிரிய ஆலோசகர் PSI – Coordinator கோகுலகுமரன், சிறிதரன் தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர், ஏனைய பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், நலன்விரும்பிகள்,அனுசரணையாளர்கள், கிராம மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.









