மதுபானம் தொடர்பில் விசேட சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து மதுபான போத்தல்கள் மற்றும் டின்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதை கடந்த வருடம் கலால் திணைக்களம் கட்டாயமாக்கியது.
எவ்வாறாயினும் தற்போது குறிப்பிட்ட போத்தல்களில் போலி ஸ்டிக்கர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறினார்.
அதன்படி, இந்த வாரம் முதல் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மதுபான உற்பத்தியாளர்கள் மீது விதிக்கப்படும் வரிகளை எவ்வித முரண்பாடுகளும் இன்றி அரசாங்கம் வசூலிப்பதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.