முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சஞ்சய சிறிவர்தன நேற்று (11) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அத்தனகல்ல பகுதியில் உள்ள சஞ்சய சிறிவர்தனவுக்கு சொந்தமான காணியில் T-56 ரக துப்பாக்கி, 2 மகசின்கள், 130 தோட்டாக்கள் மற்றும் 6 தோட்டாக்களை பொலிஸார் இன்று கண்டெடுத்ததையடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து, அப்பகுதியில் மறைத்துவைக்கப்பட்டுள்ள மேலும் சில துப்பாக்கிகளை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.