இலங்கை நாட்டின் அதிமேதகு ஜனாதிபதியின் திட்ட முன்மொழிவில் நாடாளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் கிளின் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் சிரமாதானம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது குருக்கள்மடம் பொது மயானம் இன்றைய தினம் (16) துப்பரவு செய்யப்பட்டதுடன், பற்றை காடுகளாக காணப்பட்ட பொது மயானம் கழக உறுப்பினர்களால் சுத்தம் செய்யப்பட்டது.
அதேசமயம் இந் நிகழ்வானது கழக தலைவர் நா.பிரியதர்சன் வழிகாட்டலில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


